Friday, 23 March 2012

மண் ஆய்வு மற்றும் மாதிரிகள் சேகரிக்கும் முறைகளும்

                         நமது நாட்டின் பெருகிவரும் மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் தீவிர வேளாண்மையை தொடர வேண்டியுள்ளது. உணவு உற்பத்தியை அதிகரிக்க உயர் விளைச்சல் இரகங்களையும் தேவைக்கு அதிகமான இரசாயன உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதின் காரணமாகவும் மண்ணின் வளமும் பயிர் உற்பத்தி திறனும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலை நீடித்தால் உணவு உற்பத்தியில் தன்னிறைவற்ற நிலை நமது நாட்டில் ஏற்பட்டுவிடும். ஆகையால் இதனை நிவர்த்தி செய்வது இன்றைய தலைமுறையின் தலையாய கடமையாகும்.

                   இக்குறைவினைத் தீர்க்கவும் நிலத்தின் வளத்தை பெருக்கவும் மண்ணின் தேவைக்கேற்ப இடு பொருட்களை இட வேண்டும். மண் வளத்தை அறிந்து அதை பராமரிப்பதில் மண்ஆய்வே இன்றியமையாததாகிறது.மண் ஆய்வின் நோக்கம்• மண்ணின் பௌதீக மற்றும் இரசாயன குணங்களை கண்டறிதல்

• மண் வளத்தை அறிந்து அதனை நல்ல முறையில் பராமரித்தல்

• மண்ணில் உள்ள சத்துக்களை ஆய்வு செய்து அடுத்த பயிருக்கு தேவையான உரமிடுதல்

• மண்ணின் கார – அமில நிலையை அறிந்து நிலத்தை சீர்திருத்தி விளை திறனை அதிகரித்தல்

• ஆய்வுப்படி தேவையான உரமிட்டு குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுதல்

• சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் பாதுகாத்தல்

மண் பரிசோதனை என்றால் என்ன?
                    மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகள் மண்ணின் கார – அமில நிலை, உப்புக்களின் அளவு மற்றும் களர் உவர் போன்ற பிரச்சனைகள் ஆகியவற்றை வேதியியல் மற்றும் பௌதீக ஆய்வின் மூலம் கண்டறிவதே மண் பரிசோதனையாகும்.மண் ஆய்வின் நிலைகள்1) மண் மாதிரி சேகரித்தல்

2) சேகரித்த மண் மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்துதல்

3) ஆய்வு முடிவுகளை ஒருங்கிணைத்து பிரச்சினைகளை கண்டறிதல்

4) முடிவுகளுக்கேற்ப பரிந்துரை செய்தல்மண் மாதிரி எடுக்கும் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்• வரப்பு, வாய்க்கால்கள், எரு குவித்த இடங்கள், மரத்தடி நிழல்கள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு குப்பை உரங்கள், பூஞ்சாண மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட இடங்களில் மண் மாதிரி எடுக்க கூடாது.

• பயிர் அறுவடைக்குப் பின்னும் அல்லது உரமிடுவதற்கு முன்னும் மண் மாதிரி எடுக்க வேண்டும்.

• உரம் மற்;றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிரு;நத சாக்குகள் அல்லது பைகளை மண் மாதிரி எடுக்க பயன் படுத்தக் கூடாது.மண் மாதிரி சேகரிக்க வேண்டிய காலம்• நிலம் தரிசாக இருக்கம் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்

• உரமிட்டவுடன் சேகரி;க்க கூடாது. குறைந்தது மூன்று மாத இடைவெளி அவசியம் தேவை.

• பயிர்கள் உள்ள நிலங்களில் மண்மாதிரிகள் எடுக்க கூடாது

மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை• மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை சருகு புல் செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.

• மாதிரி எடுக்கும் போது ஆங்கில எழுத்து ஏ போல் மண்வெட்டியால் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.

• இவ்வாறாக குறைந்த பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.

• மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் அவற்றை நிழலில் உலர்த்த வேண்டும்.

• நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குப்பி மூலம் தான் மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி இரும்பு சட்டிகளை பயன் படுத்தக் கூடாது.

• பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 1-2 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் பகுத்து எடுத்து அனுப்ப வேண்டும்.

கால் குறைப்பு முறை

வாளியில் சேகரித்த மண்ணை சுத்தமான சாக்கு அல்லது பாலீத்தீன் தாள் மீது பரப்பி அதனை நான்காக பிரித்து எதிர் முனைகளில் காணப்படும் இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் அரை கிலோ அளவு கிடைக்கும் வரை இம்முறையினை கையாள வேண்டும்.

சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை அல்லது பாலீத்தீன பையில் போட்டு அதன் மீது கீழ்க்காணும் விவரங்களை குறிப்பிட்டு மண் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.1. விவசாயியின் பெயர் மற்றும் முகவரி

2. கிராமம் மற்றும் ஊராட்சி ஒன்றியம்

3. சர்வே எண்

4. பாசன வசதி

5. சாகுபடி செய்த பயிர்

6. சாகுபடி செய்யப் போகும் பயிர்

மண் மாதிரி எடுக்கும் ஆழம்மண் மாதிரி எடுக்கும் ஆழம் பயிர்களின் வேரின் ஆழம் மற்றும் வயதுக்கேற்றவாறு மாறுபடும்.வ.எண் பயிர் வகை மண் மாதிரி எடுக்கும் ஆழம்

அங்குலத்தில் செ.மீ.

1. புல் மற்றும் புல் வெளி 2 5

2. நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறிய தானியப் பயிர்கள் (சல்லி வேர்ப் பயிர்கள்) 6 15

3. பருத்தி, கம்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள்(ஆணி வேர்ப் பயிர்கள்) 9 22..5

4. நிரந்தரப் பயிர்கள் மலைப் பயிர்கள் 12 24 36 அங்குல ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும் 30 60 90

அங்குல ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க

வேண்டும்

பாசன நீர் பரிசோதனை அவசியமும் சேமிக்கும் முறைகளும்
'நீரி;ன்றி அமையாது உலகு' என்ற பொன்மொழிக்கேற்ப விவசாயத்தில் நிலத்திற்கு அடுத்தபடியாக நீர் தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் உள்ள மொத்த நீரிவளத்தில் 90 வேளாண்மைக்கு பயன்படுகிறது. பெரும்பாலான விளைநிலங்களில் பிரச்சனைக்குரிய மண் மற்றும் பாசன நீர் உபயோகத்தால் உவர் மற்றும் களர் நிலங்களாக மாறி பயிர் விளைச்சலை பாதித்துக் கொண்டிருக்கின்றன. விளை நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கக் கூடிய வழிமுறைகளில் மிக முக்கியமானது மண் மற்றும் பாசன நீர் பரிசோதனயாகும்.பாசன நீரில் உள்ள கரையக்கூடிய உப்புக்களின் அளவு மற்றும் தன்மை அதன் பயன்பாட்டு தகுதியை குறிக்கிறது. சோடியம் (ய)போரான் ()கால்சியம் கார்பனேட் (ஊயஊழு) போன்ற உப்புக்கள் பாசன நீரில் அதிகம் இருந்தால் நிலம் உவர் தன்மையால் பாதிக்கப்பட்டு பயிர் விளைச்சலைவும், வளர்ச்சியையும் வெகுவாக குறைத்துவிடும். பாசன நீரில் உள்ள உப்புகள் மண்ணில் அதிக அளவில் படிந்து விதை முளைப்புத்திறன், வேரின் வளர்ச்சி மற்றும் பயிர் வளர்ச்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ குறைத்துவிடும்.இந்த அளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பாசனநீர்; உள்ள உப்புக்களை கண்டறிந்து நிவர்த்தி செய்ய பாசன நீர் பரிசோதனை மிகவும் அவசியமாகும் பாசன நீரின் மின் கடத்தும் திறன் அளவினை பரிசோதனை மூலம் தெரிந்து 1 டெசிசீமனுக்கு மேல் இருந்தால் உடனடியாக நிவர்த்தி முறைகளை கையாள வேண்டும். அதே போல்தான் பாசன நீரில் படியும் சோடியம் (ய) என்ற அயனியின் அளவு மற்ற அயனிகளைவிட அதிகமாக இருந்தால் அந்த பாசன நீரைப் பெறும் மண்ணின் உறிஞ்சும் தன்மை பாதிக்கப்பட்டு பயிருக்கு கிடைக்கக்கூடிய ஊட்டத்சத்துக்கள் தடைபட்டு பயிர் விளைச்சல் குறைந்துவிடும்.எனவே ஒவ்வொரு விவாசய நிலத்திலும் பாசனநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு மண் மற்றும் நீர் பரிசோதனை கூடங்களில் கொடுக்கப்பட வேண்டும்.பாசன நீர் மாதிரிகளை சேகரிக்கும் முறைகள்

• பாசன நீர் மாதிரிகளை சேகரிக்கும் குடுவைகளையோ (அ) பிளாஸ்டிக் டப்பாக்கலிலோ அதே நிறைக் கொண்டு (அ) 3 முறை அலசிவிட்டு பின்னர் பாசன நீர் மாதிரியை அதில் நிரப்ப வேண்டும்.

• பம்ப் (அ) மோட்மார்பளிலிருந்து பாசன நீர் எடுக்க குறைந்தது 1 ½ மணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு பி;ன்னர் அந்த நீர் மாதிரிகளை எடுக்க வேண்டும்.

• ஏரி, ஆறு மற்றும் குளங்களிலிருந்து எடுக்க மாதிரி பாட்டில்களை நீரின் மேற்பரப்புக்கு கீழ் வைத்து தண்ணீரால் நிரப்பி பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.

• இந்த நீர் மாதிரி பாட்டில்களில் விவசாயியின் பெயர், முகவரி, வயலின் சர்வே எண், பாசன வசதி (கிணறு, ஏரி, ஆறு), பயிரிடப்படும் பெயர் மற்றும் இரகம் போன்ற தகவல்களுடன் மண் ஆய்வுக்கூடத்தில் கொடுக்க வேண்டும்.மண் வள மேம்பாட்டில் அங்கக உரங்கள்

நாம் பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இரசாயன உரங்களை மட்டும் இட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் மண்ணின் பௌதீக, இரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு மண்ணின் நலமும் வளமும் நீர் செய்து வருகிறது. பொதுவாக மண்ணின் வளம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மண்ணின் தன்மையை பொருத்து மண்வளம் இடத்திற்கு இடம் மாறுபடும். பயிர்கள் எடுத்தக் கொள்ளும் சத்துக்களின் அளவுகளை அறிந்து அதற்கேற்ப அங்கக உரங்களை இரசாயன உரங்களுடன் சேர்த்து இட்டால்தான் மண்வளம் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.மணற்பாங்கான மண்ணில் மண் துகள்கள் கட்டுமானம் அடையாமல் தனித்தனியாக இருக்கும். எனவே நீர்பிடிப்புத் திறன் மிகவும் குறைவாக இருக்கும். ஆகையால் பயிருக்கு அளிக்கப்படும் நீரும், இரசாயன உரங்களும், நீரில் கரைத்து எளிதில் வீணாகிவிடும். எனவே நீர்த்தேவையும் உரத்தையும் அதிகரிக்கும்.இதே போன்று களிமண் அதிகமாக உள்ள இடங்களில் மண் இறுகிவிடும். எனவே மண்ணில் நீர் ஊடுருவும் தன்மை, காற்றோட்டம், மண்ணில் வெப்பம் பரவுதல் போன்றவை குறைந்து காணப்படும். கரிமப் பொருள் போதுமான அளவு இருந்தால் மணல்நிலம், களிநிலம் இரண்டிலுமே மண் கருணைகளாக கட்டுமானம் பெற்று காற்றோட்டம், வெப்பநிலை, நீரை ஈற்று வைக்கு திறன் போன்றவை பயிர் வளர்ச்சிகளுக்கு ஏற்றவாறு அமையும்.சத்துக்கள் நிலை நிறுத்தப்படுதல்

நாம் இடும் இரசாயன உரங்கள் மற்றும் அங்கக உரங்களிலிருந்து பயிர்கள் சத்துக்களை அப்படியே எடுத்துக் கொள்வதில்லை. அவை மண்ணில் பல உயர், வேதி வினைகளுக்கு உட்பட்டு அயனிகளாக உருவாகின்றன. இந்த அயனிகளைத்தான் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன. பயிர்கள் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்பட்டால்தான் பயிரின் வளர்ச்சிக்காலம் முழுவதும் சத்துள்ள மண் வழங்க முடியும். மணற்பாங்கான மண்ணில் இந்த அயனி மாற்றுத்திறன் மிகவும் குறைவாக இருக்கும். எனவே சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படாமல் மண் கரைசலுடன் சேர்ந்து வீணாகிவிடும். ஆனால் அங்கக உரங்கள் தொடர்ந்து மண்ணில் இடும் போது மண்ணின் கூழ்மத்தன்மை அதிகரித்து மண்ணின் வளமும் அதிகரிக்கும். இச்சத்துக்கள் மண்ணில் நிலைநிறுத்தப்படுவதால் அடுத்துப் பயிரிடும் பயிர்களுக்கு சத்துக்களை குறைத்து இட்டால் போதுமானது.மேல் மண் இறுக்கம் என்றால் என்ன?

மேல் மண் இறுக்கம் என்பது மணற்பாங்கான மேற்பரப்பு மண்ணில் ஏற்படும் ஒரு பௌதீக பிரச்சினையாகும். மேல் மண்ணில் விழும்; மழைத்துளிகளின் தாக்கத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் வறட்சியாலும் மேல் மண் இறுக்கம் ஏற்படுகின்றது.இவ்வாறு இறுகும் தன்மையால் மண்ணில் மேல் பரப்பு கடினமடைந்து விதைக்கப்படும் விதைகள் முளைத்து வெளிவரும் போது ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி முளைப்பதற்கு ஒரு தடையை ஏற்படுத்தகிறது. இதனால் விதை முளைப்பு திறன் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. மேலும் மழை நீர் நிலத்தில் உட்புகுவதற்கும் தடையாக இருப்பதால் மழை நீர் மேலோட்டமாக ஓடிச்சென்று வடிந்து விடுகிறது. இதனால் பயிர்களுக்குத் தேவையான நீரை மண்ணின் அடிப்பகுதியில் சேமித்து வைத்துக் கொள்ள முடிவதில்லை. இது தவிர மண் அரிப்பு உண்டாவதற்கும் இது ஏதுவாக அமைகிறது.மேல் மண் இறுக்கம் என்பது உலகின் பல நாடுகளில் பல்வேறு வகையான தட்பவெப்ப சூழ்நிலைகளில் காணப்படும் பிரச்சினையாகும். வெப்பமான மற்றும் மிதவெப்பமான சீதோஷ்ண நிலைகள் இது உண்டாவதற்கு ஏற்ற சூழ்நிலைகளாகும்மேல்; மண் இறுக்கம் ஏன் ஏற்படுகிறது?மண்கண்டம் அதிக ஆழமில்லாமல் கீழ் பரப்பில் பாறைகள் காணப்படுதல், மேற்பரப்பு மண்ணில் அதிக களியில்லாமல் மணற்சாரியாக இருத்தல், மண்ணில் அங்ககப் பொருட்கள் சுண்ணாம்புச் சத்து மற்றும் பயிர்களுக்குத் தேவையான மற்ற மணிச்சத்து பொருட்கள் குறைவாக இருத்தல் போன்றவை மேல் மண் இறுக்கம் ஏற்பட முக்கிய காரணங்களாகும.;;மேல் மண் இறுக்கம் மணற்பாங்கான நிலங்களிலும் செம்பாறை மண் வகைகளிலும் பரவலாக காணப்படுகிறது. மணற்பாங்கு மற்றும் களி அதிகமில்லாத நிலங்களில் இப்பிரச்சினை ஏற்படுகிறது. இந்த வகையான மண்ணில் மண்துகள்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கூட்டாக இல்லமல் தனித்தனியாகவும் கூட்டாக உள்ளவை வலுவற்றதாகவும் உள்ளன. மழைநீர் வேகமாக நிலத்தில் விழும் பொழுது வலுவற்ற மண்துகள்களின் கூட்டு சிதைந்து விடுகிறது. இப்படி தனித்தனியான மண் துளிகள் மழை நீரால் மேற்பரப்பிற்குத் தள்ளப்பட்டு மண்ணின் துவாரங்களை அடைத்து மண் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.இந்த வகை மண் இறுக்கம் பின் அமிலத்தன்மையுள்ள நிலங்களில் இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடுகளுடன் கலந்து மேலும் இறுக்கமடைகிறது. இவ்வாறான மண் இறுக்கம் காய்ந்த நிலையில் கான்க்ரீட் போல கடினமாக இருக்கும். ஆனால் ஈரப்பதத்தில் இருக்கும் போது மிருதுவாக இருக்கும்.மேல் மண் இறுக்கத்தல் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?மண்ணின் மேற்பரப்பு இறுகிக் கடினமாகி விடுகிறது.இதனால் விதைகள் முளைத்து வெளிவருவது மிகவும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக பயிர் எண்ணிக்கiயை பராமரிப்பது இயலாததாகி விடுகிறது. மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை குறைந்து மழை நீர் மண்ணில் தங்காமல் ஓடிவிடுகிறது. மண்ணிற்கும் மேற்பரபிற்பும் நடக்கும் ஆக்ஸிஜன் போன்ற வாயு பரிமாற்றம் பாதிக்கப்டுகிறது. இதனால் பயிரின் வேர் வளர்ச்சி பாதிக்கப்படும். மண்ணின் அழுத்தம் அதிகமாகிறது. மண்ணில் துளைகள் குறைந்து மண்ணின் கூட்டுத்தண்மை குறைந்து பயிர் வளர்ச்சிக்குத் தகுதியில்லாத பௌதீக குணங்கள் ஏற்படுகின்றன. இவை பயிர் வளர்ச்சியையும் விளைச்சலையும் மிகவும் பாதிக்கின்றன.மேல் மண் இறுக்கத்தை நிர்வகிக்கும் வழிகள்• பொதுவாக செம்பாறை மண் வகைகளில் அங்கக மற்றும் தழைச்சத்துக்கள் குறைவாக இருப்பதனாலும் அதிகப்படியான மணிச்த்து மண்ணில் பிடித்து வைக்கப்படுவதாலும் உயிர் உரங்கள் மற்றும் ராக் பாஸ்பேட் போன்ற மணிச்சத்து உரங்களை பயன்படுத்தினால் மேல் மண் இறுக்கப் பிரச்சனை நிவர்த்தியாவதோடு நிலங்களில் உள்ள சத்துக்கள் உடனடியாகபயிர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.• தெளிப்பு நீர் பாசன முறையை கையாண்டு அதன் மூலமாக மண்ணிற்கும் பயிருக்கும் தேவையான அளவு நீரை அடிக்கடி அளித்து வருவதால் நிலம் காயாமல் எப்போதும் ஈரமாகவே இருக்கும். எனவே மேல் மண் இறுக்கப் பிரச்சினை குறைய வாய்ப்புள்ளது.• மண்துளிகள் கூட்டமைப்பு சிதையாமல் இருக்க நிலத்தை சற்று அதிகமான ஈரப்பதத்தில் உழவு செய்ய வேண்டும்.• பல தடவை நிலத்தை உழுவதால் நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாவதுடன் அவை சுரக்கும் பாகு போன்ற திரவங்களினால் மண்துளிகளின் கூட்டுகள் நிலத்தில் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.• வேளாண் கழிவுப் பொருட்களான இலை தழைகள் வைக்கோல் போன்றவற்றை நிலத்தின் மேற்பரப்பில் பரப்பி வைத்தால் நிலத்தில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுப்பதோடு மழைநீர் தாக்கும் வேகத்தை மட்டுப்படுத்தி மண்துளிகளின் கூட்டு சிதைந்து விடாமல் பாதுகாக்கலாம்.• தொழு உரம் (10 டன்எக்டர்) மற்றும் தென்னை நார் கழிவு உரம் (1.5 டன்எக்டர்) இட வேண்டும்.• சுண்ணாம்பு தூளை எக்டருக்கு 2 டன் வீதம் இடலாம்• சர்க்கரை ஆலைக் கழிவு எக்டருக்கு 5 முதல்; 10 டன் அளவில் இடுவதாலும் மண் இறுக்கத்தின் பாதிப்பு குறையும்.• விதைகளை பார்களின் சரிவில் விதைக்க வேண்டும்.• பெரிய அளவுடைய விதைகளை மேல் மண் இறுக்கப்;; பிரச்சினையுள்ள நிலங்களில் ஒரு குழிக்கு இரண்டு அல்லது மூன்று விதைகளாக கூட்டாக விதைக்கலாம்.Monday, 20 February 2012

kz;izg; nghd;dhf;Fq;;fs;


kz; ts Nkk;ghL

gaph;fspd; caph; ehb tskhd kz;jhd;. kz;iz tsg;gLj;jpdhy; kfj;jhd kf#iyg; ngwyhk;. kz;iz tsg;gLj;Jtjw;F gy;NtW Kiwfs; cs;sd. Mdhy; mtw;wpw;nfy;yhk; mbg;gilahf miktJ kz; ghpNrhjid vdg;gLk; kz; Ma;T.

kz; rj;Jf;fs;

kz;zpy; gaph;fSf;F Njitahd 13 Cl;lr;rj;Jf;fs; epiwe;Js;sd. mtw;wpy; 6 Cl;lr;rj;Jf;;;fs; kpf Kf;fpakhdit mit Ng&l;lr;rj;Jf;fs; vd miof;fg;gLfpd;wd.  mit jio (N)>  kzp (P)  rhk;gy; (K)>  fhy;rpak; (Ca) kf;dPrpak; (Mg) kw;Wk; ry;gh;(S) rj;Jf;fs;.

Friday, 23 April 2010

Soil sampling, processing and storage


Soil testing is an essential component of soil resource management. Each sample collected must be a true representative of the area being sampled. Utility of the results obtained from the laboratory analysis depends on the sampling precision. Hence, collection of large number of samples is advisable so that sample of desired size can be obtained by sub-sampling. In general, sampling is done at the rate of one sample for every two hectare area. However, at-least one sample should be collected for a maximum area of five hectares. For soil survey work, samples are collected from a soil profile representative to the soil of the surrounding area.

Materials required
            1. Spade or auger (screw or tube or post hole type)
            2. Khurpi  
            3. Core sampler 
            4. Sampling bags
            5. Plastic tray or bucket

Sample Collection - PicturesLinkWithin

Related Posts with Thumbnails