Friday 23 March 2012

மேல் மண் இறுக்கம் என்றால் என்ன?





மேல் மண் இறுக்கம் என்பது மணற்பாங்கான மேற்பரப்பு மண்ணில் ஏற்படும் ஒரு பௌதீக பிரச்சினையாகும். மேல் மண்ணில் விழும்; மழைத்துளிகளின் தாக்கத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் வறட்சியாலும் மேல் மண் இறுக்கம் ஏற்படுகின்றது.



இவ்வாறு இறுகும் தன்மையால் மண்ணில் மேல் பரப்பு கடினமடைந்து விதைக்கப்படும் விதைகள் முளைத்து வெளிவரும் போது ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி முளைப்பதற்கு ஒரு தடையை ஏற்படுத்தகிறது. இதனால் விதை முளைப்பு திறன் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. மேலும் மழை நீர் நிலத்தில் உட்புகுவதற்கும் தடையாக இருப்பதால் மழை நீர் மேலோட்டமாக ஓடிச்சென்று வடிந்து விடுகிறது. இதனால் பயிர்களுக்குத் தேவையான நீரை மண்ணின் அடிப்பகுதியில் சேமித்து வைத்துக் கொள்ள முடிவதில்லை. இது தவிர மண் அரிப்பு உண்டாவதற்கும் இது ஏதுவாக அமைகிறது.



மேல் மண் இறுக்கம் என்பது உலகின் பல நாடுகளில் பல்வேறு வகையான தட்பவெப்ப சூழ்நிலைகளில் காணப்படும் பிரச்சினையாகும். வெப்பமான மற்றும் மிதவெப்பமான சீதோஷ்ண நிலைகள் இது உண்டாவதற்கு ஏற்ற சூழ்நிலைகளாகும்



மேல்; மண் இறுக்கம் ஏன் ஏற்படுகிறது?



மண்கண்டம் அதிக ஆழமில்லாமல் கீழ் பரப்பில் பாறைகள் காணப்படுதல், மேற்பரப்பு மண்ணில் அதிக களியில்லாமல் மணற்சாரியாக இருத்தல், மண்ணில் அங்ககப் பொருட்கள் சுண்ணாம்புச் சத்து மற்றும் பயிர்களுக்குத் தேவையான மற்ற மணிச்சத்து பொருட்கள் குறைவாக இருத்தல் போன்றவை மேல் மண் இறுக்கம் ஏற்பட முக்கிய காரணங்களாகும.;;



மேல் மண் இறுக்கம் மணற்பாங்கான நிலங்களிலும் செம்பாறை மண் வகைகளிலும் பரவலாக காணப்படுகிறது. மணற்பாங்கு மற்றும் களி அதிகமில்லாத நிலங்களில் இப்பிரச்சினை ஏற்படுகிறது. இந்த வகையான மண்ணில் மண்துகள்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கூட்டாக இல்லமல் தனித்தனியாகவும் கூட்டாக உள்ளவை வலுவற்றதாகவும் உள்ளன. மழைநீர் வேகமாக நிலத்தில் விழும் பொழுது வலுவற்ற மண்துகள்களின் கூட்டு சிதைந்து விடுகிறது. இப்படி தனித்தனியான மண் துளிகள் மழை நீரால் மேற்பரப்பிற்குத் தள்ளப்பட்டு மண்ணின் துவாரங்களை அடைத்து மண் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.



இந்த வகை மண் இறுக்கம் பின் அமிலத்தன்மையுள்ள நிலங்களில் இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடுகளுடன் கலந்து மேலும் இறுக்கமடைகிறது. இவ்வாறான மண் இறுக்கம் காய்ந்த நிலையில் கான்க்ரீட் போல கடினமாக இருக்கும். ஆனால் ஈரப்பதத்தில் இருக்கும் போது மிருதுவாக இருக்கும்.



மேல் மண் இறுக்கத்தல் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?



மண்ணின் மேற்பரப்பு இறுகிக் கடினமாகி விடுகிறது.



இதனால் விதைகள் முளைத்து வெளிவருவது மிகவும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக பயிர் எண்ணிக்கiயை பராமரிப்பது இயலாததாகி விடுகிறது. மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை குறைந்து மழை நீர் மண்ணில் தங்காமல் ஓடிவிடுகிறது. மண்ணிற்கும் மேற்பரபிற்பும் நடக்கும் ஆக்ஸிஜன் போன்ற வாயு பரிமாற்றம் பாதிக்கப்டுகிறது. இதனால் பயிரின் வேர் வளர்ச்சி பாதிக்கப்படும். மண்ணின் அழுத்தம் அதிகமாகிறது. மண்ணில் துளைகள் குறைந்து மண்ணின் கூட்டுத்தண்மை குறைந்து பயிர் வளர்ச்சிக்குத் தகுதியில்லாத பௌதீக குணங்கள் ஏற்படுகின்றன. இவை பயிர் வளர்ச்சியையும் விளைச்சலையும் மிகவும் பாதிக்கின்றன.



மேல் மண் இறுக்கத்தை நிர்வகிக்கும் வழிகள்



• பொதுவாக செம்பாறை மண் வகைகளில் அங்கக மற்றும் தழைச்சத்துக்கள் குறைவாக இருப்பதனாலும் அதிகப்படியான மணிச்த்து மண்ணில் பிடித்து வைக்கப்படுவதாலும் உயிர் உரங்கள் மற்றும் ராக் பாஸ்பேட் போன்ற மணிச்சத்து உரங்களை பயன்படுத்தினால் மேல் மண் இறுக்கப் பிரச்சனை நிவர்த்தியாவதோடு நிலங்களில் உள்ள சத்துக்கள் உடனடியாகபயிர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.



• தெளிப்பு நீர் பாசன முறையை கையாண்டு அதன் மூலமாக மண்ணிற்கும் பயிருக்கும் தேவையான அளவு நீரை அடிக்கடி அளித்து வருவதால் நிலம் காயாமல் எப்போதும் ஈரமாகவே இருக்கும். எனவே மேல் மண் இறுக்கப் பிரச்சினை குறைய வாய்ப்புள்ளது.



• மண்துளிகள் கூட்டமைப்பு சிதையாமல் இருக்க நிலத்தை சற்று அதிகமான ஈரப்பதத்தில் உழவு செய்ய வேண்டும்.



• பல தடவை நிலத்தை உழுவதால் நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாவதுடன் அவை சுரக்கும் பாகு போன்ற திரவங்களினால் மண்துளிகளின் கூட்டுகள் நிலத்தில் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.



• வேளாண் கழிவுப் பொருட்களான இலை தழைகள் வைக்கோல் போன்றவற்றை நிலத்தின் மேற்பரப்பில் பரப்பி வைத்தால் நிலத்தில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுப்பதோடு மழைநீர் தாக்கும் வேகத்தை மட்டுப்படுத்தி மண்துளிகளின் கூட்டு சிதைந்து விடாமல் பாதுகாக்கலாம்.



• தொழு உரம் (10 டன்எக்டர்) மற்றும் தென்னை நார் கழிவு உரம் (1.5 டன்எக்டர்) இட வேண்டும்.



• சுண்ணாம்பு தூளை எக்டருக்கு 2 டன் வீதம் இடலாம்



• சர்க்கரை ஆலைக் கழிவு எக்டருக்கு 5 முதல்; 10 டன் அளவில் இடுவதாலும் மண் இறுக்கத்தின் பாதிப்பு குறையும்.



• விதைகளை பார்களின் சரிவில் விதைக்க வேண்டும்.



• பெரிய அளவுடைய விதைகளை மேல் மண் இறுக்கப்;; பிரச்சினையுள்ள நிலங்களில் ஒரு குழிக்கு இரண்டு அல்லது மூன்று விதைகளாக கூட்டாக விதைக்கலாம்.







No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails