Friday 23 March 2012

மண் ஆய்வு மற்றும் மாதிரிகள் சேகரிக்கும் முறைகளும்

                         நமது நாட்டின் பெருகிவரும் மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் தீவிர வேளாண்மையை தொடர வேண்டியுள்ளது. உணவு உற்பத்தியை அதிகரிக்க உயர் விளைச்சல் இரகங்களையும் தேவைக்கு அதிகமான இரசாயன உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதின் காரணமாகவும் மண்ணின் வளமும் பயிர் உற்பத்தி திறனும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலை நீடித்தால் உணவு உற்பத்தியில் தன்னிறைவற்ற நிலை நமது நாட்டில் ஏற்பட்டுவிடும். ஆகையால் இதனை நிவர்த்தி செய்வது இன்றைய தலைமுறையின் தலையாய கடமையாகும்.

                   இக்குறைவினைத் தீர்க்கவும் நிலத்தின் வளத்தை பெருக்கவும் மண்ணின் தேவைக்கேற்ப இடு பொருட்களை இட வேண்டும். மண் வளத்தை அறிந்து அதை பராமரிப்பதில் மண்ஆய்வே இன்றியமையாததாகிறது.



மண் ஆய்வின் நோக்கம்



• மண்ணின் பௌதீக மற்றும் இரசாயன குணங்களை கண்டறிதல்

• மண் வளத்தை அறிந்து அதனை நல்ல முறையில் பராமரித்தல்

• மண்ணில் உள்ள சத்துக்களை ஆய்வு செய்து அடுத்த பயிருக்கு தேவையான உரமிடுதல்

• மண்ணின் கார – அமில நிலையை அறிந்து நிலத்தை சீர்திருத்தி விளை திறனை அதிகரித்தல்

• ஆய்வுப்படி தேவையான உரமிட்டு குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுதல்

• சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் பாதுகாத்தல்

மண் பரிசோதனை என்றால் என்ன?
                    மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகள் மண்ணின் கார – அமில நிலை, உப்புக்களின் அளவு மற்றும் களர் உவர் போன்ற பிரச்சனைகள் ஆகியவற்றை வேதியியல் மற்றும் பௌதீக ஆய்வின் மூலம் கண்டறிவதே மண் பரிசோதனையாகும்.



மண் ஆய்வின் நிலைகள்



1) மண் மாதிரி சேகரித்தல்

2) சேகரித்த மண் மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்துதல்

3) ஆய்வு முடிவுகளை ஒருங்கிணைத்து பிரச்சினைகளை கண்டறிதல்

4) முடிவுகளுக்கேற்ப பரிந்துரை செய்தல்



மண் மாதிரி எடுக்கும் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்



• வரப்பு, வாய்க்கால்கள், எரு குவித்த இடங்கள், மரத்தடி நிழல்கள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு குப்பை உரங்கள், பூஞ்சாண மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட இடங்களில் மண் மாதிரி எடுக்க கூடாது.

• பயிர் அறுவடைக்குப் பின்னும் அல்லது உரமிடுவதற்கு முன்னும் மண் மாதிரி எடுக்க வேண்டும்.

• உரம் மற்;றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிரு;நத சாக்குகள் அல்லது பைகளை மண் மாதிரி எடுக்க பயன் படுத்தக் கூடாது.



மண் மாதிரி சேகரிக்க வேண்டிய காலம்



• நிலம் தரிசாக இருக்கம் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்

• உரமிட்டவுடன் சேகரி;க்க கூடாது. குறைந்தது மூன்று மாத இடைவெளி அவசியம் தேவை.

• பயிர்கள் உள்ள நிலங்களில் மண்மாதிரிகள் எடுக்க கூடாது

மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை



• மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை சருகு புல் செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.

• மாதிரி எடுக்கும் போது ஆங்கில எழுத்து ஏ போல் மண்வெட்டியால் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ. அல்லது 0-23 செ.மீ.) ஒரு இஞ்சு (அ) 2.5 செ.மீ பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.

• இவ்வாறாக குறைந்த பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.

• மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் அவற்றை நிழலில் உலர்த்த வேண்டும்.

• நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிய வேண்டுமானால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குப்பி மூலம் தான் மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி இரும்பு சட்டிகளை பயன் படுத்தக் கூடாது.

• பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு 1-2 கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் பகுத்து எடுத்து அனுப்ப வேண்டும்.

கால் குறைப்பு முறை

வாளியில் சேகரித்த மண்ணை சுத்தமான சாக்கு அல்லது பாலீத்தீன் தாள் மீது பரப்பி அதனை நான்காக பிரித்து எதிர் முனைகளில் காணப்படும் இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் அரை கிலோ அளவு கிடைக்கும் வரை இம்முறையினை கையாள வேண்டும்.

சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை அல்லது பாலீத்தீன பையில் போட்டு அதன் மீது கீழ்க்காணும் விவரங்களை குறிப்பிட்டு மண் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.



1. விவசாயியின் பெயர் மற்றும் முகவரி

2. கிராமம் மற்றும் ஊராட்சி ஒன்றியம்

3. சர்வே எண்

4. பாசன வசதி

5. சாகுபடி செய்த பயிர்

6. சாகுபடி செய்யப் போகும் பயிர்

மண் மாதிரி எடுக்கும் ஆழம்



மண் மாதிரி எடுக்கும் ஆழம் பயிர்களின் வேரின் ஆழம் மற்றும் வயதுக்கேற்றவாறு மாறுபடும்.



வ.எண் பயிர் வகை மண் மாதிரி எடுக்கும் ஆழம்

அங்குலத்தில் செ.மீ.

1. புல் மற்றும் புல் வெளி 2 5

2. நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறிய தானியப் பயிர்கள் (சல்லி வேர்ப் பயிர்கள்) 6 15

3. பருத்தி, கம்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள்(ஆணி வேர்ப் பயிர்கள்) 9 22..5

4. நிரந்தரப் பயிர்கள் மலைப் பயிர்கள் 12 24 36 அங்குல ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும் 30 60 90

அங்குல ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள் எடுக்க

வேண்டும்





No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails