Friday 23 March 2012

பாசன நீர் பரிசோதனை அவசியமும் சேமிக்கும் முறைகளும்




'நீரி;ன்றி அமையாது உலகு' என்ற பொன்மொழிக்கேற்ப விவசாயத்தில் நிலத்திற்கு அடுத்தபடியாக நீர் தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் உள்ள மொத்த நீரிவளத்தில் 90 வேளாண்மைக்கு பயன்படுகிறது. பெரும்பாலான விளைநிலங்களில் பிரச்சனைக்குரிய மண் மற்றும் பாசன நீர் உபயோகத்தால் உவர் மற்றும் களர் நிலங்களாக மாறி பயிர் விளைச்சலை பாதித்துக் கொண்டிருக்கின்றன. விளை நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கக் கூடிய வழிமுறைகளில் மிக முக்கியமானது மண் மற்றும் பாசன நீர் பரிசோதனயாகும்.



பாசன நீரில் உள்ள கரையக்கூடிய உப்புக்களின் அளவு மற்றும் தன்மை அதன் பயன்பாட்டு தகுதியை குறிக்கிறது. சோடியம் (ய)போரான் ()கால்சியம் கார்பனேட் (ஊயஊழு) போன்ற உப்புக்கள் பாசன நீரில் அதிகம் இருந்தால் நிலம் உவர் தன்மையால் பாதிக்கப்பட்டு பயிர் விளைச்சலைவும், வளர்ச்சியையும் வெகுவாக குறைத்துவிடும். பாசன நீரில் உள்ள உப்புகள் மண்ணில் அதிக அளவில் படிந்து விதை முளைப்புத்திறன், வேரின் வளர்ச்சி மற்றும் பயிர் வளர்ச்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ குறைத்துவிடும்.



இந்த அளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பாசனநீர்; உள்ள உப்புக்களை கண்டறிந்து நிவர்த்தி செய்ய பாசன நீர் பரிசோதனை மிகவும் அவசியமாகும் பாசன நீரின் மின் கடத்தும் திறன் அளவினை பரிசோதனை மூலம் தெரிந்து 1 டெசிசீமனுக்கு மேல் இருந்தால் உடனடியாக நிவர்த்தி முறைகளை கையாள வேண்டும். அதே போல்தான் பாசன நீரில் படியும் சோடியம் (ய) என்ற அயனியின் அளவு மற்ற அயனிகளைவிட அதிகமாக இருந்தால் அந்த பாசன நீரைப் பெறும் மண்ணின் உறிஞ்சும் தன்மை பாதிக்கப்பட்டு பயிருக்கு கிடைக்கக்கூடிய ஊட்டத்சத்துக்கள் தடைபட்டு பயிர் விளைச்சல் குறைந்துவிடும்.



எனவே ஒவ்வொரு விவாசய நிலத்திலும் பாசனநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு மண் மற்றும் நீர் பரிசோதனை கூடங்களில் கொடுக்கப்பட வேண்டும்.



பாசன நீர் மாதிரிகளை சேகரிக்கும் முறைகள்

• பாசன நீர் மாதிரிகளை சேகரிக்கும் குடுவைகளையோ (அ) பிளாஸ்டிக் டப்பாக்கலிலோ அதே நிறைக் கொண்டு (அ) 3 முறை அலசிவிட்டு பின்னர் பாசன நீர் மாதிரியை அதில் நிரப்ப வேண்டும்.

• பம்ப் (அ) மோட்மார்பளிலிருந்து பாசன நீர் எடுக்க குறைந்தது 1 ½ மணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு பி;ன்னர் அந்த நீர் மாதிரிகளை எடுக்க வேண்டும்.

• ஏரி, ஆறு மற்றும் குளங்களிலிருந்து எடுக்க மாதிரி பாட்டில்களை நீரின் மேற்பரப்புக்கு கீழ் வைத்து தண்ணீரால் நிரப்பி பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப வேண்டும்.

• இந்த நீர் மாதிரி பாட்டில்களில் விவசாயியின் பெயர், முகவரி, வயலின் சர்வே எண், பாசன வசதி (கிணறு, ஏரி, ஆறு), பயிரிடப்படும் பெயர் மற்றும் இரகம் போன்ற தகவல்களுடன் மண் ஆய்வுக்கூடத்தில் கொடுக்க வேண்டும்.



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails