நாம் பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இரசாயன உரங்களை மட்டும் இட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் மண்ணின் பௌதீக, இரசாயன மற்றும் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு மண்ணின் நலமும் வளமும் நீர் செய்து வருகிறது. பொதுவாக மண்ணின் வளம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மண்ணின் தன்மையை பொருத்து மண்வளம் இடத்திற்கு இடம் மாறுபடும். பயிர்கள் எடுத்தக் கொள்ளும் சத்துக்களின் அளவுகளை அறிந்து அதற்கேற்ப அங்கக உரங்களை இரசாயன உரங்களுடன் சேர்த்து இட்டால்தான் மண்வளம் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
மணற்பாங்கான மண்ணில் மண் துகள்கள் கட்டுமானம் அடையாமல் தனித்தனியாக இருக்கும். எனவே நீர்பிடிப்புத் திறன் மிகவும் குறைவாக இருக்கும். ஆகையால் பயிருக்கு அளிக்கப்படும் நீரும், இரசாயன உரங்களும், நீரில் கரைத்து எளிதில் வீணாகிவிடும். எனவே நீர்த்தேவையும் உரத்தையும் அதிகரிக்கும்.
இதே போன்று களிமண் அதிகமாக உள்ள இடங்களில் மண் இறுகிவிடும். எனவே மண்ணில் நீர் ஊடுருவும் தன்மை, காற்றோட்டம், மண்ணில் வெப்பம் பரவுதல் போன்றவை குறைந்து காணப்படும். கரிமப் பொருள் போதுமான அளவு இருந்தால் மணல்நிலம், களிநிலம் இரண்டிலுமே மண் கருணைகளாக கட்டுமானம் பெற்று காற்றோட்டம், வெப்பநிலை, நீரை ஈற்று வைக்கு திறன் போன்றவை பயிர் வளர்ச்சிகளுக்கு ஏற்றவாறு அமையும்.
சத்துக்கள் நிலை நிறுத்தப்படுதல்
நாம் இடும் இரசாயன உரங்கள் மற்றும் அங்கக உரங்களிலிருந்து பயிர்கள் சத்துக்களை அப்படியே எடுத்துக் கொள்வதில்லை. அவை மண்ணில் பல உயர், வேதி வினைகளுக்கு உட்பட்டு அயனிகளாக உருவாகின்றன. இந்த அயனிகளைத்தான் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன. பயிர்கள் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்பட்டால்தான் பயிரின் வளர்ச்சிக்காலம் முழுவதும் சத்துள்ள மண் வழங்க முடியும். மணற்பாங்கான மண்ணில் இந்த அயனி மாற்றுத்திறன் மிகவும் குறைவாக இருக்கும். எனவே சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படாமல் மண் கரைசலுடன் சேர்ந்து வீணாகிவிடும். ஆனால் அங்கக உரங்கள் தொடர்ந்து மண்ணில் இடும் போது மண்ணின் கூழ்மத்தன்மை அதிகரித்து மண்ணின் வளமும் அதிகரிக்கும். இச்சத்துக்கள் மண்ணில் நிலைநிறுத்தப்படுவதால் அடுத்துப் பயிரிடும் பயிர்களுக்கு சத்துக்களை குறைத்து இட்டால் போதுமானது.
No comments:
Post a Comment